LCB ஸ்மார்ட் சேமிப்புக் கணக்கு உங்கள் பணத்தை நிர்வகிப்பதற்கும் வளர்ப்பதற்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காகச் சேமித்தாலும் அல்லது அவசரகால நிதித் தேவைக்காக உருவாக்கினாலும், இந்த சேமிப்புக் கணக்கு உங்கள் நிதி நோக்கங்களை அடைவதற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
முக்கிய அம்சங்கள் : -
- ஆரம்ப வைப்புத்தொகை ரூ.1,000.00.
- வட்டியைப் பெற குறைந்தபட்ச இருப்பு ரூ.1,000.00 பராமரிக்கப்பட வேண்டும்.
- நிலையியற் கட்டளை (ஸ்டாண்டிங் ஆர்டர்) வசதி
- நாளாந்த மீதி மீது வட்டி கணக்கிடப்பட்டு மாதந்தோறும் வரவு வைக்கப்படும்.
- ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இலவச SMS அறிவிப்பு.
தகைமை : -
- 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையில் வசிப்பவர்கள் ஸ்மார்ட் சேமிப்புக் கணக்கிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தேவைகள் : -
- ஆணைப்படிவ அட்டையை பூர்த்திசெய்தல்
- செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையின் (NIC), சாரத்திய உரிமத்தின் நகல்
- KYC தேவை (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) / NIC இலக்கத்தினை கொண்ட கடவுச்சீட்டு
- முகவரி ஆவணங்களின் சான்று - தேசிய அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணத்திலிருந்து வேறுபட்டால், முகவரி சரிபார்ப்பு ஆவணம் (அதாவது நிலையான பயன்பாட்டுச் சிட்டை நகல், வங்கி அறிக்கை, வதிவிடச் சான்று ஆகியவை அவசியம் ).