தங்கக் கடன்
உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்
தங்கக் கடன்

நாங்கள் வழங்கும் பல்வேறு வகையான நிதிச் சேவைகளுக்கு மேலதிகமாக, இலங்கை சந்தையில் எங்களின் மிகவும் பிரபலமான சலுகைகளில் ஒன்று "தங்கக் கடன்" என்ற சேவையாகும். டுஊடீகு தங்கக் கடன்கள் சேவை உங்கள் வசதிக்காக எங்கள் அனைத்து கிளைகளிலும் கிடைக்கிறது. இது எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத்தை சீராக நடத்த குறுகிய காலத்தில் அவர்களின் குறுகிய கால செயல்பாட்டு மூலதனத் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.

 

பலன்கள் :-

 • போட்டி வட்டி வீதங்கள்
 • வட்டிக்கு மேலதிமான மறைமுக செலவுகள் அல்லது கட்டணங்கள் இல்லை
 • விரைவான சேவை மற்றும் உங்கள் மதிப்புமிக்க தங்கப் பொருட்களைப் பாதுகாத்தல்
LCB தங்கக் கடன்

விவசாயம், பயிர்ச்செய்கை, மீன்பிடி, மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் ஆகியோரின் அவசரத் தேவைகளுக்கு எளிதான சேவை.

 

தகைமை : -

 • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்.

 

பயன்கள்

 • சந்தையில் உங்கள் தங்கத்தின் சிறந்த மதிப்பின் அடிப்படையில் அதிகபட்ச முற்பணத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும்,
 • நடைமுறையில் உள்ள சந்தை வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வீதங்கள்,
 • உங்கள் விருப்பங்களைப் பொறுத்து 3, 6 மற்றும் 12 மாதங்களுக்கு திருப்பிச் செலுத்தும் வசதிகள் உண்டு,
 • மிகவும் வசதியான SMS சேவை
 • பயிர்கள் மூலம் இலாபம் ஈட்டிய பிறகு அல்லது அறுவடை செய்த பிறகு, குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லாமல் திருப்பிச் செலுத்தலாம்.
 • குறித்த தங்க ஆவணம் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளப்படும்
 • தங்கநகைகளிற்கான அதிகூடிய முற்பணம்
 • மறைமுக கட்டணங்கள் இல்லை