ஒன்றிணைந்து நிற்கும் நாடாக, இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி, நாளுக்கு நாள் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகக் கனவுகளை மேம்படுத்துவதே எமது ஒரே இலக்காக கொண்டுள்ளோம். உங்கள் வணிகத்தை வளப்படுத்துவதற்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும், உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்ல உங்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் பக்கபலமாக உள்ளோம். குறைந்த வருமானம் பெறுவோருக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் வாய்ப்புக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு தனித்துவமான தீர்வுகளுடன் நட்புறவான வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறோம். அதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை கண்டறிந்து, அவர்களின் வளங்களின் அடிப்படையில் வகைப்படுத்துவது எங்களின் செயற்பாடுகளில் ஒன்றாகும். சிறு வணிகங்களை சிறிய அளவில் இருந்து நடுத்தர அளவில் விரிவாக்குவதற்கு முறையான வழிகாட்டுதலுடன் கடன் வசதிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக அர்ப்பணிப்புள்ள ஆலோசனைக் குழுவுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவையை நாங்கள் அமைத்துள்ளோம் என்பது ஒரு சிறந்த உதாரணமாகும்.
காட்டி | தொகை “000 ரூபாவில் |
---|---|
காலப்பகுதிக்கான தேறிய இலாபம் (PAT) | 162,771 |
தேறிய வடடி வருமானம் | 604,615 |
மொத்தமாக சொத்து | 5,877,500 |
மொத்தமாக சேகரிக்கப்பட்ட சொத்து | 4,989,916 |
மொத்த தேறிய கடன் மற்றும் முற்பணங்கள் | 4,180,232 |
திரவநிலை சொத்து விகிதம் | 22.53% |
முதலீட்டு நிதியம் | 2,796,190 |
இடர் எடை மூலதன விகிதங்கள் | 45.15% |
LCB பைனான்ஸ் என்று அழைக்கப்படும் லங்கா கிரெடிட் அன்ட் பிசினஸ் பைனான்ஸ் Pடுஊ ஆனது இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் வங்கி அல்லாத நிதி நிறுவன (NBFI) துறையில் ஒரு வங்கி அல்லாத ஒரு நிதி நிறுவனமாக முழுமையாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு நிதி நிறுவனமாகும்.
இதுவரை 15 கிளைகளின் வலையமைப்புடன், நாடு முழுவதும் 51,500 வாடிக்கையாளர்கள் எங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
31/03/2023 வரையான எங்களின் நிதிச் செயல்திறன் தகவலைக் கவனிப்பதன் மூலம் நீங்கள் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
உங்களின் வசதிக்காக வீட்டிற்கு வருகை தந்து எங்கள் சேவையை உங்களிடம் கொண்டு வருவதன் மூலம் உங்கள் நேர விரயமும் சிரமமம் குறைகிறது. மேலும் அதன் மூலம், வாடிக்கையாளர்கள் தமது கடமையிலிருந்து விடுமுறை பெற்று அல்லது எமது கிளைக்கு வருகை தந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்குப் பதிலாக, எமது வங்கிப் பிரதிநிதியுடன் சந்திப்பைத் திட்டமிட்டு உங்கள் வசதிக்கேற்ப கொடுக்கல் வாங்கலினை செய்து முடிக்கலாம்.
LCB பைனான்ஸ் பிஎல்சி ஆனது எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வலுவான சட்டக் கட்டமைப்பைப் பின்பற்றுகிறது. எமது ஒழுங்குமுறை பகுப்பாய்வு எமது வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உறுதி செய்கிறது.